வெள்ளி, 20 மே, 2011

கீதா சாரம்


கீதா சாரம்

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்?
அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையகிறது
மறுநாள் அது வேறோருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நீதியாகும்

கீதா சாரம்

Geetha Saram by Sri Krishna

பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்கு!

பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்கு!
இ‌ந்து ம‌க்க‌ளி‌ன் பு‌னித நூலாக‌க் கருத‌ப்படுவது பக‌வ‌த் ‌கீதையாகு‌ம். மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு மு‌ன்ன‌ர் எ‌திர‌ணியை பா‌ர்வை‌யி‌ட்ட அ‌ர்ஜூன‌ன், அ‌ங்கே த‌ன் உற‌வின‌ர்க‌ள் பல‌ர் இரு‌ப்பதை‌க் க‌ண்டு போ‌ரிட மறு‌க்‌கிறா‌ன்.

அ‌ப்போது அ‌ர்ஜூனனை சமாதான‌ம் செ‌ய்த ‌அவரது தேரோ‌ட்டியான ‌கிரு‌ஷ‌்ண‌ர் (பா‌ர்‌த்தசார‌தி), நா‌ம் த‌ர்ம‌த்‌தி‌ற்காக போ‌ரிட வ‌ந்து‌ள்ளோ‌ம். அ‌ப்போது உறுவு முறைக‌ள் அ‌ங்கே குறு‌க்‌கிட‌க் கூடாது. ‌நீ உ‌ன் கடைமையை‌ச் செ‌ய்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறா‌ர். அ‌ப்போது ‌கிரு‌ஷ‌்ண‌ர் எடு‌த்து‌ச் சொ‌ல்லு‌ம் த‌த்துவ‌ங்களு‌ம், யோக‌ங்களு‌ம் அட‌ங்‌கிய நூ‌ல் தா‌ன் பகவ‌த் ‌கீதை. 

அ‌தி‌ல் ‌கிரு‌ஷ‌்ண பரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்கு அல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும் உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப் புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை. 

எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம் ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம், யாரையு‌ம் வெறு‌ப்ப‌தி‌ல்லையோ, எத‌ற்கு‌ம் ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டது இர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌தி கொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.

மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர் கூறு‌கிறார‌், பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம், கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம் சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே

Bhagavad-Gita Tamil Speech by Sri S V Ramani

பகவத் கீதை





பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். மேலும் அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது.



கண்ணனின் ஐந்து வாதங்கள்

அப்படி கண்ணன் என்ன சொல்லி அவனுக்குப் புரிய வைத்தார் என்பதுதான் கீதை. அர்ச்சுனனின் ஐயமென்ற சிடுக்கை அவிழ்த்து விடுவதற்காக் கண்ணன் எடுத்தாளும் வாதங்கள் ஐந்து. ஒவ்வொரு வாதமும் ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்க்கும் பார்வையோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனப்போக்கினால் ஏற்றுக்கொள்ளும் போர்வையையோ அடித்தளமாகக் கொண்டது. அவ்வைந்தாவன:

* வேதாந்தப்பார்வை

    * சுயதருமப் பார்வை

    * கருமயோகப் பார்வை

    * எல்லாம் அவன் செயல் என்ற பக்திப்போர்வை

    * அவனும் செயலாளியல்ல, பிரகிருதி தான் செய்கிறது என்ற தத்துவப்போர்வை.


ஞாயிறு, 15 மே, 2011

ac kannan pullatraja.mpg

VTS 01 1 1

கட்சிகொடி

விண்டி.வி110314 023043

யாதவர்மாநாடு

ஆயர்பாடிமாளிகையில்

கி௫ஷ்ணா புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

ம௫தூர்பாடல்

கண்ணன்எங்கள்கண்ணன்

வியாழன், 12 மே, 2011

துபாயிலிருந்து முத்துச்சாமியாதவ் நண்பர்களுடன்



















yadavarkalin vaazhvurimai maanattu thidalil thalaivarin varukai thalaiva...

யாதவர்எழிச்சி

kovai 04.wmv

YADAVAR SONG

YADAVAR PERAVAI

THERIRUVELI YADHAVAR

yadavar(nellai)

yadava

Yadava Maha sabai   The helping hands for Yadavas

வியாழன், 5 மே, 2011

யாதவன்


                   www.gokulasambai.blogspot.com

                                              www.gokulasambai.blogspot.com



                               www.gokulasambai.blogspot.com
                                     www.gokulasambai.blogspot.com
                                        www.gokulasambai.blogspot.com

                                      www.gokulasambai.blogspot.com
                                      www.gokulasambai.blogspot.com
                                    www.gokulasambai.blogspot.com
                                          www.gokulasambai.blogspot.com

Accordingly the population of Yadavas as per 1931 census is as follows:

S.No. District Population

1.

Ramanathapuram
1,90,237

2.

North Arcot
1,60,003

3.

Thirunelvelli
1,57,530

4.

South Arcot
1,40,058

5.

Thanjaur
1,17,984

6.

Thrichy
1,15,934

7.

Chingleput
1,13,563

8.

Madurai
83,802

9.

Madras
23,611

10.

Coimbatore
22,973

11.

Kanyakumari
6,905

12.

Nilgiris
416

Total
11,33,016

மாவீரன் அழகுமுத்துக்கோன்


தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவரது ஆறு துணைத் தளபதிகளும் நிறுத்தப்பட்டார்கள்.

“எங்களை எதிர்ப்போருக்கு இதுதான் கதி” என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. ‘ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். அழகுமுத்துக்கோனும் அவரது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரிந்து கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் மட்டுமே உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்” என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.

248 வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் 3 தளபதிகளையும் வலப்பக்கம் 3 தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக் கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் அழகுமுத்துக்கோன்.

தாய் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து யாதவ சமூகம் பெருமை கொண்டது.

தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம். இவர்கள் இடையர்கள். ஆயர்கள். கோனார் என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். வட இந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி.

‘இடை’ (நடு) என்றத் தமிழ்ச் சொல்லில் இருந்து ‘இடையர்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் ‘முல்லை’ என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக் காட்டுகிறது. “விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்குன் இடையே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது” என பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் தங்கள் பெயர்களுடன் பிற்காலத்தில் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்து கொண்டுள்ளனர். 1891-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் ‘பிள்ளை, கரையாளர்’ என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்.

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என சொல்லப்படுகிறது.

அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத் துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனார், பொன்னையக் கோனார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள், கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். பள்ளி, கல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே.

பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் இந்த சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).

அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.

சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

ஆனந்த ரங்கராட் சந்தமு, ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் என்று இவர் குறித்துப் பல இலக்கியங்கள் உருவாகும் அளவுக்கு அவர் வரலாற்று நாயகராக விளங்கியவர். அந்தப் பெருமை யாதவர்குல சமூகத்துக்கே.

யாதவ சமூகத்தார் இந்திய சுதந்திரத்துக்கு ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.

‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.

யாதவர்கள் வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர். கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள். யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.

முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.

சிலர் அக்காள் மகளைத் த்ருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு த்ங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள்.

மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.

தொழில் துறையில் ரோஜா தீப்பெட்டி அதிபர் கோபால் கிருஷ்ண யாதவர் பங்கு மகத்தானது. அதேபோல், மதுரை யாதவர் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்விப் பணிகளை இச்சமூகத்தினர் செய்து வருகின்றனர் என்றாலும், யாதவ சமுதாய மக்களில் பெரும்பாலானோர் இப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாதவ நட்சத்திரங்கள் சிலர்:
வீரன் அழகுமுத்துக்கோன்: 18-ஆம் நூற்றாண்டிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த வீரர். 37 ஊர்களுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த கட்டலங்குளத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வெள்ளையருக்கு கப்பம் கட்ட மாட்டோம் என்று முதன் முதலாக வீரமுழக்கமிட்டவர்.

கவியரசு வேகடாசலம் பிள்ளை: தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை: இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர்.

கார்மேகக் கோனார்: மதுரை அமெரிக்கன் கல்லூரித் தலைமத் தமிழ்ப்பேராசிரியர். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். பதிப்புச் செம்மல். செந்நாப்புலவர். கோனார் நோட்ஸ் மூலம் தமிழ் மாணவர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

ம. ராதாகிருஷ்ணன்: சென்னை நகரத்தின் மேயராக இருந்து அரும்பணி ஆற்றிய அரசியல் அறிஞர்.

ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன்: காலத்தை வென்ற வரலாற்று பொக்கிஷங்களான செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் கட்டிய ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் என்ற சிற்றரசர்களைத் தந்து யாதவர் சமூகம் அரசர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

ஆனந்தரங்கம் பிள்ளை: 18-ஆம் நூற்றாண்டு தென்னிந்திய வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்தவர். பிரெஞ்சு ஆளுநரின் துபாஷியாக இருந்து அரசியல் சதுரங்கக்காய்களை நகர்த்தியவர். தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, ஆங்கிலம், பெர்ஷியன் என்று பன்மொழிப் புலமை பெற்றிருந்தும், தமிழிலேயே ‘ரங்கப்பன்’ என கையெழுத்திட்டு தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவர். ஆளுநருக்கு இணையாக கையெழுத்து இடும்போதும் தமிழிலேயே கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டநாதக் கரையாளர்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். சட்டநாதக் கமிஷனை அரசியல் வரலாறு மறக்காது. (அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கீழே பார்க்கலாம் நண்பர் நக்கீரன் பாண்டியன் தயவில்)

தமிழ்க்குடிமகன்: திமுக ஆட்சியில் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். மதுரை யாதவர் கல்லூரி முதல்வராக இருந்து கல்விப் பணியாற்றியவர். சிறந்த மேடைப்பேச்சாளர்.

கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார், அண்ணாவின் நண்பரும் குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு உதவிய அரங்கண்ணல். ‘கோனார் உரை’யை உருவாக்கித் தந்து தமிழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியில் பேருதவியாக இருந்த அய்யம்பெருமாள் கோனார். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய முள்ளிக்குளம் ராமசாமிக் கோனார். கல்வித் தொண்டாற்றிய இராஜம்மாள் தேவதாஸ், கவிக்கொண்டல் கவிஞர் வாணிதாசன், பொதுத் தொண்டர் கா.வே. திருவேங்கடம் பிள்ளை, நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும் பேரா.தி.அ. சொக்கலிங்கம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சோ.ப., அதிமுக அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன், முன்னாள் இந்திய வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணன் என்று எண்ணற்றவர்களித் தந்து பெருமை தேடிக் கொண்ட சமூகம் யாதவர் சமூகம்.

வாழ்க யாதவம்


வாழ்க யாதவம்
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன் அழகு முத்துக்கோன் யாதவ் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் யாதவர் கொடி

ஏன் தேவை இந்த அமைப்பு நமக்கு ?



ஏன் தேவை இந்த அமைப்பு நமக்கு ?

நமது புதிய யாதவ சமுதாய இயக்கம் குறித்த சில விளக்கங்களை நம்மோடு இணைய காத்திருக்கும் நம் புதிய சொந்தங்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

முதலில் நம் இயக்கம் தோற்றுவிக்கப்படும் நோக்கம் நம் இனத்தின் எழுச்சிக்காகவும் நம் மக்களின் வளர்ச்சிக்காகவும் என்பதனை உணர்த்த வேண்டும். இந்த இயக்கம் வேறு சமுதாயத்துக்கோ அல்லது வேறு இயக்கதுக்கோ எதிராக செயல்பட உருவாக்கப்படும் இயக்கம் அல்ல். நமக்கு நாமே என்ற அடிப்படையில் நம் வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் இயக்கம் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.

நம்மில் பெரும்பாலோர் நினைப்பது என்ன என்றால் ஒரு சாதி ரீதியான இயக்கத்தில் நாம் ஈடுபட்டால் சமுதாயத்தில் உள்ள மற்ற இன மக்கள் நம்மை தவறாக அல்லது விரோதமாக நினைப்பார்களோ என்று எண்ணுகிறார்கள்.இது தேவை அற்ற எண்ணம் என்பதனை உணர்த்த வேண்டும்.இந்த உலகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை ஈன்றெடுத்த பெற்றோர், தன் குடும்பம், தன் இனம், தன் மண், தன் ம்க்கள், என்று செய்ய வேண்டிய க்டமை உள்ளது. இதில் பலர் தங்களது முதல் கடமையான பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட செய்ய மறக்கிறார்கள் அல்லது தவறுகிறார்கள். அந்த வகையில் நம் சமுதாயத்திற்கு பணியாற்றிட கிடைக்கும் நல் வாய்ப்பாக இதை கருதிட வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி கூற்று மறுப்பதற்க்கில்லை, மனித சமுதாயம் அனைத்தும் ஒரே சாதி என்ற நிலை என்று அனைவராலும் ஏற்று கொள்ளபடுகின்றதோ, அன்று இந்த இடையனும் அதை ஏற்றுக்கொள்வான்.

இன்றைய நிலை என்ன நாம் ப்ள்ளியில் சேருவதிலிருந்து, உயர் கல்விக்கு வாய்ப்பு கிடைப்பதிலிருந்து, பிறகு வேலை வாய்ப்பு பெறுவது வரை அனைத்தும் சாதியின் அடிப்படையில் தான் உள்ளது. ஏன் உங்கள் பெற்றோரை உங்கள் திருமணதிற்காக பிற சாதியில் உள்ள உங்கள் ந்ண்பர்கள் வீட்டில் பெண் கேட்டு பார்க்கச்சொல்லுங்கள் யாரவது பெண் தருகிறர்களா என்று பார்ப்போம். நம்மை ஆளுகின்ற அரசாங்கமே சாதிக்கு இத்தனை அமைச்சர் என்று ஒதுக்கீடு செய்து தான் ஆட்சி செய்கின்றது. அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் சாதி அடிப்படையில் தான் ஆட்கள் நியமிக்கப்படுகின்றர்கள். உயர் நீதிமன்ற நீதிபதியே சாதி ரீதியாக நியமிக்கப்படும் தேசம் இது. வன்னியர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்புகளில் முன்னுரிமை வேண்டும் என்று ராமதாசு கேட்டதை நினைவுபடுத்தி பாருங்கள். நம் சமுதாயத்தை விட வலிமை குன்றிய பல சமுதாயங்கள் இன்று ஆட்சியில் இருந்து அதிகாரம் வரை கொடி கட்டி ப்றக்க அவர்களை அன்னாந்து வாய்பிளந்து பார்த்து கொண்டிருக்கின்றான் இடையன். ஏன் இந்த நிலைமை? நம்மில் உள்ள அல்ட்சியத்தாலும், அறியாமையினாலும் நாமே தேடி கொண்ட நிலை இது. ஒன்றை மற்றும் யோசித்து பாருங்கள் ஒரு சமுதாயத்தில் உள்ள தனி மனிதனின் வளர்ச்சி அந்த சமுதாயதிற்கு வளர்ச்சி தரும் என்று கூறிவிட இயலாது, ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தில் உள்ள அத்தனை பேருக்கும் கட்டாயம் ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சியை தரும். இந்த ஒரு நிலையை அடைகின்ற லட்சியத்தோடு தான் நாம் இன்று இணையவிருகின்றோம்.

நாம் தொடங்க இருக்கும் புதிய இயக்கதின் செயல் திட்டங்கள் யாவும் மிக மிக கவனமுடன் வகுக்க வேண்டும். ஏனென்றால் இன்று இந்தியாவில் மிக மலிவாக உரு வாகுவது புதிய இயக்கங்கள் தான். அந்த வகையில் பத்தோடு பதினொண்றாக தோன்றும் இயக்கம் தான் இதுவும் என்று ஆரம்பத்தில் மற்றவர்கள் நம்மை பற்றி நினைப்பது இயல்பே. நமது செயல்பாடுகள் தான் நமக்கு அங்கீகாரம் பெற்று தரக்கூடிய ஒரே வழி. நமது செயல்பாட்டீன் அடிப்படையில் தான் நமது உறுப்பினர் பெறுக்கதிற்கும் வழி கிடைக்கும். ஆனால் சிறப்பாக செய்ல்பட நல்ல எண்ணிக்கையில் உறுப்பினர் தேவை. ஆகவே ஆரம்ப கட்டத்தில் நாம் உறுப்பினர் சேர்க்கைக்கு சற்று கூடுதல் சிரத்தை எடுக்கத்தான் வேண்டும். நாள்டைவில் நம் செயல்பாடுகள் நமக்கு உறுப்பினர்களை தானே பெற்றுதரும். அந்த வகையில் நாம் இப்பொழுது செய்ய வேண்டிய பணி நமது சொந்தங்களிடம், குறைந்த பட்சம் இந்த அரங்கத்தில் உள்ள நம்மவர்களிடம் இது குறித்து விளக்கமாக எடுத்துரைத்து அவர்களிடம் இந்த இயக்கத்திற்கான நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.ஏன் தேவை இந்த அமைப்பு நமக்கு ?


திங்கள், 2 மே, 2011

தன்னம்பிக்கை டானிக்


தன்னம்பிக்கை டானிக்


நட்சத்திரக் கூட்டங்களுக்கு குறி வையுங்கள். அப்போது தான் வானின் உச்சியையாவது நிச்சயம் தொட முடியும்.


”பிரம்மாண்டமாகத் திட்டமிடுங்கள்”….துணை இல்லையே என்று கவலைப்படாதீர்கள்…உங்களைச் செயல்படுத்த 60 லட்சம் கோடி உயிரணுக்கள் தயாராக உள்ளன. – ரூதர்போர்டு.

Don’t be Ever Rest.
Be an Everest.


தோல்வியை எருவாக்கு;
வெற்றியை உருவாக்கு.


சுற்றவே பிறந்தது பூமி
சுடரவே பிறந்தது கதிர்
உலவப் பிறந்தது காற்று
உழைக்கப் பிறந்தவன் நீ.

When you Rest, You Rust.


வீசும் காற்றும் எழும் அலையும் எப்போதும் மிகத் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.


வீரியத்தோடு விடாது முயற்சி செய்! தயங்கிப் பின் வாங்காதே! தளர்ந்து தடம் புரண்டு விடாதே! தொடர்ந்து செய்! துணிந்து செய்! ஊக்கத்தோடு பாடுபடு! உறுதியோடு பாடுபடு! அப்போது காலங்கனிந்து கைகூடி வரும். வெற்றி தேவதை உன்னை வாழ்த்தி வரவேற்பாள்!


விழாமையன்று நம் பெருமை…விழுந்தொரும் எழுவதே!

சுறுசுறுப்பாயிருங்கள்…ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்.


தீப்பொறியாக ஒரு கணம் இருந்து விட்டு மறைந்து விடுங்கள்.காலமெல்லாம் புகைந்து கொண்டிருப்பதை விட…


தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.


மறந்து விடாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் உங்கள் சரித்திரத்தில் ஒவ்வொரு பக்கமாகும்..


மனச இரும்பாக்கனும்; மலய துரும்பாக்கனும்.

Even the word Impossible says I’m Possible.


பறந்து செல்லுங்கள். உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள். நேரத்தைத் தவிர…- நெப்போலியன்.


If you want to be Remembered do one thing superbly well.

பொன்மொழிகள்

பொன்மொழிகள்


1.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.-அப்ரஹாம் லிங்கன்

2.மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்

3.புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.
- பிலிப் குறொஸ்பி

4.மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.
- பேர்ள் எஸ். பக்

5.புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்

6.எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.
- எமர்சன்
உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.
- எலனொர் றூஸ்வெல்ற்

7.எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.

என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.
- நதானியல் பிராண்டன்
8.கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம்என்பதை ஒரு போதும் அறிய முடியாது.
- நெப்போலியன் ஹில்

காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்


காலத்தைக் வென்று நிற்கும் பொன்மொழிகள்

சுவாமி விவேகானந்தர்: 
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். 


வில்லியம் ஷேக்ஸ்பியர்:  
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்  
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். 


அடால்ஃப் ஹிட்லர்: 
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. 


ஆலன் ஸ்டிரைக்:  
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள். 


அன்னை தெரசா: 
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.  


பான்னி ப்ளேயர்:
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
 
லியோ டால்ஸ்டாய்:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. 


அப்ரஹாம் லிங்கன்:
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.  


ஐன்ஸ்டைன்: 
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.  


சார்லஸ்:
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும்.

கீதையில் மனித மனம்


கீதையில் மனித மனம்

கீதையில் மனித மனம்

கீதையில் மனித மனம் 'கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்' நூலிலிருந்து அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை.மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.கண்ணன் சொல்கிறான் :"அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."அர்ஜுனன் கேட்கிறான் :"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது.""கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"பகவான் கூறுகிறான் :"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.என்ன இந்த மனது?காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.அது என்ன வைராக்கியம்உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?பகவத் தியானத்தால் முடியும்.அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.அதாவது ஒன்றையே நினைத்தல்.அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.ஒரு கதை உண்டு!ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.
தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு

நெருப்பாய் இரு


நெருப்பாய் இரு!



ஒரே ஒரு முறை
பிறந்த மனிதனே…

அறிவின் எல்லைகள்
விரிந்த புனிதனே…

பிறந்து வந்ததன்
அர்த்தம் தெரியுமா…

நெருப்பைப்போல் உன்னால்
வாழ முடியுமா…

நெருப்பு ஒன்றுதான்
தொட்டதை எல்லாம் நெருப்பாக்கும்…

இன்னும் புதிது புதியதாய் தேடியே
அதையும் வசமாக்கும்…

flame1
























நெருப்பு என்றுமே
மேல்நோக்கித்தான் நடைபோடும்…

தன் பொறுப்பை உணர்ந்துதான்
அனலாய் நடனம் தினம் ஆடும்…
அணைத்தாலும் சோராது ஒருபோதும்…
சிறு காற்று பட்டாலும் உடல் சீறும்…
சுற்றுவட்டாரம் சூடாகும்…
எந்த திசையும் தாண்டியது விளையாடும்…

உனக்குள்ளே சுழலும் வெப்பம்
அது சொல்லும் வாழ்வின் அர்த்தம்…

உன்னை நீ உணர்ந்தால் நித்தம்
உனதாகும் உலகின் மொத்தம்…

நண்பா நண்பா
என்றும் நெருப்பாய் இரு…

எந்த வெற்றிக்குமே நீ
பொறுப்பாய் இரு…

நண்பா நண்பா
என்றும் தீயாய் இரு…

ஊர் போற்றும் என்றால்
அது நீயாய் இரு…

-பிரியன் கவிதை

விடியலை நோக்கி...

விடியலை நோக்கி...
விடியலை நோக்கி பயணிக்கிறது வாழ்க்கை
இடையில் இருட்டில் இடமறியா பொழுதில்
இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி
இடையூறு செய்கையில் - கிடைத்த
இடைவெளியில் கிடு கிடுவென
விரைகிறது வாழ்க்கை பயணம்!
நெடுதூர நடைபாதை நடப்பதறியா பயணம்
நினைவுகள் நிஜமாகுமா என்ற ஏக்கத்தை
நடுக்கடலில் நிறுத்துகிறது நங்கூரங்கள்
நீங்காத நினைவலைகள் கரைகிறது
நிலவின் பிறைகளாய்
நடு நடுவில் நகர்த்துகிறது
நம்பிக்கை வார்த்தைகள்!
எங்கு செல்கிறோம் என்ன செய்கிறோமென்று
எண்ணுவதற்குள் எத்தனை பிரச்சினைகள்
எத்தனை சிக்கல்கள் அத்தனையும் தாண்டி
எண்ணியதை அடைய
எண்ணம் போல் வாழ
எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்
எடுக்கும் முயற்சிகள் அத்தனையும்
ஏக்கத்தை நிறைவாக்கும் ஏணிப்படிகள்!
காலங்கள் சுழல, நாட்களும் நகர்கிறது
கால்களும் நடை பதிக்கிறது
கண் இமைக்கும் நேரத்தில்
காற்றாய் பறந்து போன நாட்களை
காவியங்கள் தான் கதையாய் சொல்லுமோ?
காற்றாடியை கயிறுகளால் கட்டி
கண்ணாடிக்குள் வைத்து அழகுதான் பார்க்க முடியுமா?
கவிதையாய் நாட்கள் கழிய நானும் காத்திருக்கிறேன்
காலத்தின் கைகளில்!
சந்தோஷமும் சலிப்பும் சரிசமமாய்
சுற்றம் வாழ்த்த சராசரியாய்
சொந்தம் போற்ற செயற்கையாய்
சுயத்திற்காய் சமாளிப்புக்கள் எத்தனை எத்தனை
சீராய் செல்லும் ஒருவழி பாதையில்
சிந்தனைக்கெட்டாத சுதந்திரம் கிடைத்தாற்போல்
சீக்கிரமாய் நடைகள் இடையில்
சிறு சிறு இடறல்கள், சிந்தித்துப்பார்த்தால்
சில்லரைகளை செலவழித்துப் பெற்ற
சலவை நோட்டு தான் வாழ்க்கை!
உழவர் காத்த பூமியை ஊடகங்கள் காக்கிறது
உண்மையை அறிந்தும் உமிழ் விழுங்கி
ஊமையனாகி போனது அவலம்
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்
உனக்கெதற்கு ஊர்வம்பு என்று
உள்ளத்தில் உள்ளதை உரைக்க முடியாமல்
உணர்ச்சிகளை உண்டியலில் சேமிக்கிறேன்
உடைந்த சில்லுகளாய்
உள்ளக்குமுறல்கள் உப்பாய் கரைகிறது ஊருக்காக
உயிர்வளர்த்த உறவுகளுக்காக என் உழைப்பும்
உருளும் உலகில் உழல்கிறது என் பயணமும்!

பண்பும் பாசமும் இங்கு பாதி விலையில்
பண்பாடு எங்கோ பாடத்தில் படித்த ஞாபகம்
பண்பை பறைசாற்றிய பாரதத்தை
பங்கு போட பங்காளிகள் தயார்
பாரதமாதாவை படுக்க வைத்து படையலிட்டு
பாட்டுப்பாடி பாடையில் ஏத்துகிறார்கள்..
பதறுகளே, நம் பாரதத்தின் பெருமையை
புரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லையடா என்று
புலம்ப தான் முடிகிறது என்னால்
பதறுகிறேன் பறைசாற்ற முடியாத
பரிதாப நிலையில் நானும் பயணிக்கிறேன்
பிறந்த மண்ணில் பரதேசியாய்!

வானளவிற்கு உயர வேண்டும் என்று
வாய் கிழிய பேசி பேசி
வீணடித்த நிமிடங்கள் எத்தனை எத்தனை
விரயமாக்கிய பணங்கள் எத்தனை எத்தனை
விடுதலை பெற விரும்பும் மனமும்
விடுவிக்க மனமில்லாத சமுதாயமும்
வியர்வையின் பரிசாய் வீடு வாசலும்
விண்ணப்பிக்காமல் எனக்கு கிடைத்த குடும்பமும்
விலைமதியா சொத்தாகிய என் குழந்தைகளையும்
விட்டு விட்டு விடைபெற்று செல்லும் போது
விண்ணும் மண்ணும் கேட்கும் டேய் மனிதா!
விருந்தாளியாய் வந்த நீ எதை
விதைத்து விட்டுச் சென்றாய் என...
மனிதா!
மண்ணுக்குள் மறையும் முன்
மனிதத்தையாவது விட்டு விட்டுச் செல்!