ஏன் தேவை இந்த அமைப்பு நமக்கு ?
நமது புதிய யாதவ சமுதாய இயக்கம் குறித்த சில விளக்கங்களை நம்மோடு இணைய காத்திருக்கும் நம் புதிய சொந்தங்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
முதலில் நம் இயக்கம் தோற்றுவிக்கப்படும் நோக்கம் நம் இனத்தின் எழுச்சிக்காகவும் நம் மக்களின் வளர்ச்சிக்காகவும் என்பதனை உணர்த்த வேண்டும். இந்த இயக்கம் வேறு சமுதாயத்துக்கோ அல்லது வேறு இயக்கதுக்கோ எதிராக செயல்பட உருவாக்கப்படும் இயக்கம் அல்ல். நமக்கு நாமே என்ற அடிப்படையில் நம் வளர்ச்சிக்காக உருவாக்கப்படும் இயக்கம் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
நம்மில் பெரும்பாலோர் நினைப்பது என்ன என்றால் ஒரு சாதி ரீதியான இயக்கத்தில் நாம் ஈடுபட்டால் சமுதாயத்தில் உள்ள மற்ற இன மக்கள் நம்மை தவறாக அல்லது விரோதமாக நினைப்பார்களோ என்று எண்ணுகிறார்கள்.இது தேவை அற்ற எண்ணம் என்பதனை உணர்த்த வேண்டும்.இந்த உலகத்தில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் தன்னை ஈன்றெடுத்த பெற்றோர், தன் குடும்பம், தன் இனம், தன் மண், தன் ம்க்கள், என்று செய்ய வேண்டிய க்டமை உள்ளது. இதில் பலர் தங்களது முதல் கடமையான பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட செய்ய மறக்கிறார்கள் அல்லது தவறுகிறார்கள். அந்த வகையில் நம் சமுதாயத்திற்கு பணியாற்றிட கிடைக்கும் நல் வாய்ப்பாக இதை கருதிட வேண்டும்.
சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி கூற்று மறுப்பதற்க்கில்லை, மனித சமுதாயம் அனைத்தும் ஒரே சாதி என்ற நிலை என்று அனைவராலும் ஏற்று கொள்ளபடுகின்றதோ, அன்று இந்த இடையனும் அதை ஏற்றுக்கொள்வான்.
இன்றைய நிலை என்ன நாம் ப்ள்ளியில் சேருவதிலிருந்து, உயர் கல்விக்கு வாய்ப்பு கிடைப்பதிலிருந்து, பிறகு வேலை வாய்ப்பு பெறுவது வரை அனைத்தும் சாதியின் அடிப்படையில் தான் உள்ளது. ஏன் உங்கள் பெற்றோரை உங்கள் திருமணதிற்காக பிற சாதியில் உள்ள உங்கள் ந்ண்பர்கள் வீட்டில் பெண் கேட்டு பார்க்கச்சொல்லுங்கள் யாரவது பெண் தருகிறர்களா என்று பார்ப்போம். நம்மை ஆளுகின்ற அரசாங்கமே சாதிக்கு இத்தனை அமைச்சர் என்று ஒதுக்கீடு செய்து தான் ஆட்சி செய்கின்றது. அரசாங்கத்தின் உயர் பொறுப்புகளில் சாதி அடிப்படையில் தான் ஆட்கள் நியமிக்கப்படுகின்றர்கள். உயர் நீதிமன்ற நீதிபதியே சாதி ரீதியாக நியமிக்கப்படும் தேசம் இது. வன்னியர்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்புகளில் முன்னுரிமை வேண்டும் என்று ராமதாசு கேட்டதை நினைவுபடுத்தி பாருங்கள். நம் சமுதாயத்தை விட வலிமை குன்றிய பல சமுதாயங்கள் இன்று ஆட்சியில் இருந்து அதிகாரம் வரை கொடி கட்டி ப்றக்க அவர்களை அன்னாந்து வாய்பிளந்து பார்த்து கொண்டிருக்கின்றான் இடையன். ஏன் இந்த நிலைமை? நம்மில் உள்ள அல்ட்சியத்தாலும், அறியாமையினாலும் நாமே தேடி கொண்ட நிலை இது. ஒன்றை மற்றும் யோசித்து பாருங்கள் ஒரு சமுதாயத்தில் உள்ள தனி மனிதனின் வளர்ச்சி அந்த சமுதாயதிற்கு வளர்ச்சி தரும் என்று கூறிவிட இயலாது, ஆனால் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அந்த சமுதாயத்தில் உள்ள அத்தனை பேருக்கும் கட்டாயம் ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சியை தரும். இந்த ஒரு நிலையை அடைகின்ற லட்சியத்தோடு தான் நாம் இன்று இணையவிருகின்றோம்.
நாம் தொடங்க இருக்கும் புதிய இயக்கதின் செயல் திட்டங்கள் யாவும் மிக மிக கவனமுடன் வகுக்க வேண்டும். ஏனென்றால் இன்று இந்தியாவில் மிக மலிவாக உரு வாகுவது புதிய இயக்கங்கள் தான். அந்த வகையில் பத்தோடு பதினொண்றாக தோன்றும் இயக்கம் தான் இதுவும் என்று ஆரம்பத்தில் மற்றவர்கள் நம்மை பற்றி நினைப்பது இயல்பே. நமது செயல்பாடுகள் தான் நமக்கு அங்கீகாரம் பெற்று தரக்கூடிய ஒரே வழி. நமது செயல்பாட்டீன் அடிப்படையில் தான் நமது உறுப்பினர் பெறுக்கதிற்கும் வழி கிடைக்கும். ஆனால் சிறப்பாக செய்ல்பட நல்ல எண்ணிக்கையில் உறுப்பினர் தேவை. ஆகவே ஆரம்ப கட்டத்தில் நாம் உறுப்பினர் சேர்க்கைக்கு சற்று கூடுதல் சிரத்தை எடுக்கத்தான் வேண்டும். நாள்டைவில் நம் செயல்பாடுகள் நமக்கு உறுப்பினர்களை தானே பெற்றுதரும். அந்த வகையில் நாம் இப்பொழுது செய்ய வேண்டிய பணி நமது சொந்தங்களிடம், குறைந்த பட்சம் இந்த அரங்கத்தில் உள்ள நம்மவர்களிடம் இது குறித்து விளக்கமாக எடுத்துரைத்து அவர்களிடம் இந்த இயக்கத்திற்கான நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். இதை அடைவதற்குரிய வழிகள் பற்றி உங்கள் ஆலோசனைகளை வழங்கும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.ஏன் தேவை இந்த அமைப்பு நமக்கு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக